தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) முதுகலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர்கள் மற்றும் கணினி பயிற்றுனர்களுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
செப்டம்பர் 29 ஆம் தேதி நடைபெற உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு II தேர்வும் அதே சமயத்தில் நடக்க உள்ளதால், மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனக் கூறி தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வணிகம், பொருளாதாரம், வரலாறு, புவியியல் மற்றும் அரசியல் அறிவியல் உள்ளிட்ட முதுகலை ஆசிரியர்களுக்கான பல்வேறு பாடங்களை உள்ளடக்கிய 1,996 காலியிடங்களுக்கான விரிவான அறிவிப்பை டிஆர்பி வெளியிட்டது.
முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வை ஒத்திவைத்தது டிஆர்பி
