வார இராசிப்பலன் ( 13–07-2025 முதல் 19-07–2025 வரை)

மேஷம் :

இராசிநாதன் செவ்வாய் 5ம் இடத்தில் நட்பு நிலையில் கேதுவுடன் சூட்சும வலு பெற்று இருப்பதால் நல்ல உறுதியான சிந்தனையுடன் செயல்படுவீர்கள். செவ்வாய் கேதுக்கு மிக அருகாமையில் சஞ்சரிப்பதால் குழந்தைகளுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். வாகனங்களில் சற்று கவனத்துடன் செல்வது சிறப்பு.

இராசிக்கு 2/7 ம் அதிபதி சுக்ரன் ரிஷபத்தில் ஆட்சி பெற்று நீடிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நல்ல தன வரவு இருக்கும். திருமண மற்றும் சுப நிகழ்ச்சிகள் சம்பந்தமான முயற்சிகள் வெற்றிகரமாக நடக்கும்.

கூட்டுத் தொழில் சிறப்பாக இருக்கும்.

இராசிக்கு 3/6 ம் அதிபதி புதன் கடகத்தில் பகை வீட்டில் சஞ்சரிப்பதால் முயற்சிகள் சற்று தாமதப்படலாம், இளைய சகோதரங்களோடு கருத்து வேறுபாடு ஏற்படலாம், உத்தியோகத்தில் வேலை பளு அதிகமாக காணப்படலாம் அதனால் மன அழுத்தம் ஏற்படலாம். எனினும் வாரத்தின் மத்தியில் சூரியன் அங்கு இணைவதால் அதன் பின்னர் சிறப்பாகவே இருக்கும்.

வார ஆரம்பத்தில் சந்திரன் 10,11 இடத்தில் சஞ்சரிப்பதால் தொழிலில் நல்ல மேன்மை இருக்கும். தொழிலில் நல்ல இலாபம் ஏற்படும், வருமானம் தன வரவு வாரத்தின் முற்பகுதியில் நன்றாக இருக்கும். புதன் வியாழன் இரு தினங்களில் விரையங்கள் ஏற்படலாம். வாரத்தின் இறுதி நாட்களில் சந்திரன் இராசியில் சஞ்சரிப்பதால் மேன்மையாகவே அமைகிறது.

அனுகூலமான நாட்கள், 13,14,15,18,19

 

ரிஷபம் :

இராசிநாதன் சுக்ரன் இராசியிலே ஆட்சி பெற்று இருப்பதால் தைரியமான மனநிலையுடன் செயல்படும் அற்புதமான வாரமாக அமைகிறது.  சுக்ரன் பார்வை இராசிக்கு 7ல் இருப்பதால் கணவர் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் வருமான உயர்வு, பதவி உயர்வு ஏற்படலாம்.

உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். புதிய கடன் வாங்கும் முயற்சிகள் வெற்றிகரமாக அமையும்.

இராசிக்கு 2/5 ம் அதிபதி புதன் கடகத்தில் பகை பெற்று இருப்பதால், குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்லுதல் நன்மையை பயக்கும். குழந்தைகளுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம், பேச்சில் கவனம் தேவை, நிதானத்துடன் பேசுவது நல்லது. தன வரவு பொதுவாக மிதமாகவே இருக்கும்.

இராசிக்கு 7ம் அதிபதி செவ்வாய் சிம்மத்தில் கேதுவுடன் மிக அருகாமையில் சஞ்சரிப்பதால் திருமண மற்றும் சுப நிகழ்ச்சிகள் முயற்சி சற்று தாமதப்படும்..

இராசிக்கு 11ம் அதிபதி குரு அஸ்தங்க நிலையில் இருந்து விலகியதால் இலாபங்கள் / வருமானங்கள் சீராகும்.

இராசிக்கு மூன்றாம் அதிபதி சந்திரன் பாக்கியஸ்தானம் / கரமஸ்தானம் / இலாபஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தடைபட்ட காரியங்கள் நலமாக முடியும், தொழில் இலாபம் போன்றவற்றில் மேன்மை உண்டாகும். வார இறுதி 2 நாட்களில் செலவுகள் சற்று அதிகமாக  ஏற்படலாம். ,

அனுகூலமான நாட்கள் – 14,15,16,17

 

மிதுனம் :

இராசி நாதன் புதன் கடகத்தில் பகை வீட்டில் சஞ்சரிப்பதால் சற்று தைரியம் குறைவுடன் காணப்படுவீர்கள். முயற்சிகளில் தடை தாமதம் ஏற்படலாம். ஆயினும் வார மத்தியில் 3ம் அதிபதி சூரியன் இணைவால் தடைபட்ட காரியங்கள் நல்லபடியாக நடக்கும்.

சனியின் வக்ரம் பெற்று 7ம் பார்வையால் வண்டி வீடு சம்பந்தமான விஷயத்தில் அனுகூலமான பலன்கள் ஏற்படலாம். தாமதப்பட்ட திருமண முயற்சிகளும் வெற்றி பெற வாய்ப்புகள் இருக்கின்றது. .

தனாதிபதி சந்திரன் வார முதல் நாளில் 8ல் சஞ்சரிப்பதால் மன சோர்வு கவலைகள் அலைச்சல் ஏற்படலாம், பின்னர் பாக்கியஸ்தானம் / கர்மஸ்தானம் இலாபஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வியாபாரம் இலாபம் மூத்த சகோதரங்பளால் ஆதரவு போன்றவை மேன்மையாக அமையும் நல்ல வாரம்.

சுக்ரன் 12ம் இடத்தில் இருந்து சுபத்துவமாக இருப்பதால், சுப செலவுகள் செய்வீர்கள், வெளியூர் வெளிமாநிலம், வெளிநாடு பயணங்கள் மூலம் ஆதாயம் ஏற்படும்.

 

அனுகூலமான நாட்கள் 16,17,18,19

 

 

கடகம் :

இராசி நாதன் சந்திரன் இந்த வார முதல் நாளில் இராசிக்கு 7ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்,

பின்பு திங்கள் செவ்வாய் கிழமைகளில் இராசிக்கு 8ம் இடத்தில் சஞ்சரிப்பதால் அலைச்சல் காரியத் தடை தாமதம் மற்றும் மன கவலைகள் ஏற்படலாம், புதியதாக எந்த ஒரு விஷயமும் இந்த இரண்டு நாட்களில் செய்யாமல் இருப்பது நல்லது.

தனாதிபதி சூரியன் இராசியிலே வார மத்தியில் பெயர்வதால் அரசு / தந்தை சம்பந்தமான விஷயங்கள் அனுகூலமாக இருக்கும். மேலும் நல்ல திடமான செயல்திரனோடு செயல்படுவீர்கள்.

இராசிக்கு 11/4ம்  அதிபதி சுக்ரன் ஆட்சி நிலையில் இருப்பதால், வியாபாரத்தில் நல்ல இலாபம் உத்தியோகத்தில் நல்ல வருமானம் சம்பள உயர்வு ஏற்பட சாதகமான வாரம். மேலும் ஆட்சி பெற்ற  சுக்ரன் 5ம் இடத்தை பார்ப்பதால், நல்ல சிந்தனை, குல தெய்வ அனுக்ரகம், குழந்தைகளால் மகிழ்ச்சி, குழந்தைகள் தேர்வில் வெற்றி பெரும் நல்ல வாரமாக இருக்கிறது.

இராசிக்கு இரண்டாம் இடத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும். பேச்சில் அவசரம் வேண்டாம்.

இராசிநாதன் சந்திரன் வார பிற்பகுதியில் பலமாக இருப்பதால் தொழில் மற்றும் தன வரவு மேம்படும்.  

அனுகூலமான நாட்கள் 13,18,19

 

சிம்மம் :

இராசிநாதன் சூரியன் வார மத்தியில் இராசிக்கு 12 ல் சஞ்சரிப்பதால் சற்று தன்னம்பிக்கை குறைந்து காணப்படுவீர்கள்.

இராசிக்கு 10,3 ம் அதிபதி சுக்ரன் ஆட்சி நிலையில் இருப்பதால், தொழிலில் நல்ல மேன்மை, எடுத்த காரியங்களில் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள்.  .

7ல் உள்ள இராகுவிற்கு குரு பார்வை மீண்டும் சீரானதால் கணவர் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி மகிழ்ச்சிகரமாக இருப்பீர்கள்.

தாயார் மூலம் நல்ல ஆதரவு கிடைக்கும். 

வார மத்தியில் தேய்பிறை சந்திரன் இராசிக்கு 8ம் இடத்தில் சஞ்சரிப்பதால் மனக்குழப்பம் வீன் அலைச்சல் மற்றும் முயற்சியில் தடைகள் காணப்படலாம்.

இராசியில் கேதுவிற்கு மிக அருகாமையில் செவ்வாய் சஞ்சரிப்பதால் பேச்சில் கவனம் தேவை, அவசரத்தில் எந்த காரியமும் செய்ய கூடாது.

அனுகூலமான நாட்கள் : 13,14,15,

 

கன்னி :

இராசிநாதன் புதன் இலாபஸ்தானத்தில் பகை பெற்று சஞ்சரிப்பதாலும் வார மத்தியில் விரையாதிபதி சூரியனுடன் இணைவதால் ஜாதகருக்கான விரையங்கள் ஏற்படலாம்.

இராசிக்கு 2,9 ம் அதிபதி சுக்ரன் ஆட்சி நிலையில் சஞ்சரிப்பதால் தடைபட்ட காரியங்கள் விஷயங்கள் நிறைவேறும் நல்ல அமைப்பில் இந்த வாரம் உள்ளது, மேலும் தன வரவு குடும்பத்தில் மகிழ்ச்சி, கொடுத்த வாக்கை நிறைவேற்றும் அற்புதமான வாரம்.

இலாபாதிபதி சந்திரன் வார முதலில் 6,7 ம் இடத்தில் சஞ்சரிப்பதால் உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வருமான உயர்வு கிடைக்க வாய்ப்புக்கள் உள்ளன. கூட்டுத் தொழில் மூலம் இலாபம் மேம்படும். கணவர் மனைவி மூலம் ஆதரவு ஏற்படலாம்.

வார இறுதியில் சந்திரன் 8ம் இடத்தில் சஞ்சரிப்பதால் வெள்ள சனிக்கிழமை நாட்களில் அலைச்சல், மனக்குழப்பம், மனக்கவலைகள் ஏற்படலாம், புதிய முயற்சிகளை இந்த இரண்டு நாட்களில் தவிர்ப்து நல்லது.

அட்டமாதிபதி செவ்வாய் கேதுவுடன் மிக அருகாமையில் சஞ்சரிப்பதால் வாகனம் வண்டியில் செல்பவர்கள் கவனத்துடன் செல்ல வேண்டும். நெருப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

 

அனுகூலமான நாட்கள் 14,15,16,17

 

துலாம் :

இராசி மற்றும் 8ம் அதிபதி 8ல் ஆட்சி பெற்று இருப்பதால் நல்ல சிந்தனை தைரியத்துடன் செயல்படும் நல்ல வாரமாக அமைகிறது, 8ம் இடம் சுக்ரன் இருப்பால் சுபத்துவப்பட்டு திடீர் பண வரவு, திடீர் அதிர்ஷ்டம், வெளியூர் வெளிமாநில வெளிநாடு பயணங்கள் வெற்றியைத் தரும். சுக்ரன் பார்வை 2ல் இருப்பதால் தன வரவு நன்றாக இருக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும், கொடுத்த வாக்கை காப்பாற்றும் நல்ல வாரமாக அமைகிறது.

இலாபாதிபதி சூரியன் 10 ம் இடத்திற்கு பெயர்வதால் தொழில் வியாபாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல மேன்மை ஏற்படும்.  இலாபம் நன்றாக இருக்கும்.

பாக்கியாதிபதி புதன் 10 ல் சஞ்சரிப்பதும் நல்ல தொழில் சம்பந்தமான அமைப்பு.

4,5 ம் அதிபதி சனி வார இறுதியில் வக்கிரம் அடைவதால் தாயார் குழந்தைகளால் சற்று மன சஞ்சலங்கள் ஏற்படலாம்.

2,7 அதிபதி செவ்வாய் இலாபஸ்தானத்தில் இருப்பதும் குடும்பம் கூட்டு தொழில் போன்றவற்றால் நன்மை உண்டாகும்.

சந்திரன் வார ஆரம்பத்தில் 5ல் சஞ்சரிப்பதால் அரசு சார்ந்த விஷயங்கள் அனுகூலமாக முடியும், நல்ல சிந்தனை மற்றும் குல தெய்வ அனுக்ரகம் கிடைக்கும் நல்ல வாரமாக அமைகிறது, புதன் வியாழன் இரு நாட்களில் சந்திரன் வக்ரம் பெற்ற சனியுடன் இணைவது கடன் நோய் வம்பு வழங்கு போன்ற விஷயல்களில் சாதகமாகவே இருக்கிறது, வார இறுதியில் சந்திரன் 7ம் இடத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகலாம், சுப காரியங்கள் முயற்சி நற்பலனைத் தரும்.

அனுகூலமான நாட்கள் – 16,17,18,19

 

விருச்சிகம் :

இராசிநாதன் செவ்வாய் சிம்மத்தில் கேதுவுடன் சஞ்சரிப்பதால்  இந்த வாரம் தன்னம்பிக்கை அதிகமாகவும் தைரியத்துடனும் நல்ல தெளிந்த சிந்தனையுடன் செயல்படுவீர்கள். ஆரோக்கியம சீராக இருக்கும். இராசியை சுக்ரன் பார்ப்பதும் ஒர் அற்புதமான அமைப்பு, எதிலும் துணிச்சல் தன்னம்பிக்கை வேகமான செயல்திரனுடன் காணப்படுவீர்கள்.

இராசிக்கு 7,12 ம் அதிபதி ஆட்சி பெற்று 7ம் இடத்திலே இருப்பதால் கணவர் மனைவி விட்டுக் கொடுத்து செல்லுதல் நல்லது. திருமண வரன் பார்க்கும் முயற்சிகள் தாமாதப்படலாம். எனினும் சனி வக்ரம் பெற்று 7ம் இடத்தை மூன்றாம் பார்வையால் பார்ப்பதால் அந்த தடைகள் விலகி நற்பலனே நடக்கும்.

தனாதிபதி மற்றும் பஞ்சமாதிபதி குரு 8ல் மறைந்தாலும் 12,2,4 ம் இடத்தை பார்ப்பதால் பயணங்கள், சுப விரையங்கள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன.  தனஸ்தானத்தை குரு பார்ப்பதால் நல்ல தன வரவு ஏற்படும்.

இராசிக்கு 10ம் அதிபதி சூரியன் 9ல் இருப்பது நல்ல அமைப்பு தொழில், தந்தை, அரசு, அரசு சார்ந்த விஷயங்கள் அனுகூலமாகவே இருக்கும்..

பாக்கியாதிபதி சந்திரன் இந்த வாரம் 4,5,6 ம் இடத்தில் சஞ்சரிப்பதால் தாய் வழி ஆதரவு நன்றாக இருக்கும், பெரியோர்கள் ஆசிர்வாதம் குல தெய்வ வழிபாடு குழந்தைகளால் மகிழ்ச்சி நிறைந்த நல்ல வாரமாக அமைகிறது. கடன் நோய் வம்பு வழக்குகளில் இருந்து விடுபட்டு நல்ல வாரமாகவே அமைகிறது..

அனுகூலமான நாட்கள் 13,18,19

 

தனுசு :

இராசி நாதன் குரு பகவான் இராசிக்கு 7 ம் இடத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் அனுசரித்து செல்வது நன்மையை தரும். திருமண சுப விஷயங்கள் சம்பந்தமான முயற்சிகள் தாமதப்படலாம். இராசியை குரு பார்ப்பது நல்ல யோகமாக அமைகிறது.

பாக்கியாதிபதி சூரியன் 8ல் மறைவது, சற்று சாதகமற்ற தன்மையை இந்த வாரம் தருகிறது, எனினும் புதனின் இணைவு நட்பு வீட்டில் இருப்பதால் பெரிய கஷ்டங்கள் இருக்காது. தந்தையுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம், தந்தை உடல்நலத்தில் கவனம் தேவை.

இராசிக்கு 7,10 ம் அதிபதி புதன் கடகத்தில் 8ல் மறைவதால் குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும். தொழிலில் சற்று பின்னடைவு ஏற்படலாம்.

இராசிக்கு 6,11 அதிபதி 6 ல் ஆட்சி பெற்று இருப்பதால் புதிய கடன்கள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளது, ஆரோக்கியத்தில் கவனம் தேவை, வம்பு வழக்குகளில் கவனம் தேவை. சுக்ரன் பார்வை 12ல் இருப்பதால் வெளியூர் வெளி மாநிலம் வெளி நாடு பயணங்களால் ஆதாயம் ஏற்படும். சுப விரையங்கள் ஏற்படலாம்.

சந்திரன் 3,4,5 ம்  இடத்தில் சஞ்சரிப்பதால் நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றிகரமாக இருக்கும், சிறு தூர பயணங்களால் ஆதாயம் ஏற்படலாம். தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பெரியோர்கள் ஆசிகள், குல தெய்வ அனுக்ரகம் கிடைக்க வாய்ப்புக்கள் உள்ளது. தொழில் வியாபாரம் சம்பந்தமான இலாபம் நல்லபடியாக இருக்கும்.

அனுகூலமான நாட்கள் – 14,15,

 

மகரம் :

இராசிக்கு 5,10 ம் அதிபதி சுக்ரன் ஆட்சி பெற்று 5ம் இடத்தில் இருந்து இலாபஸ்தானத்தை பார்ப்து மிகச்சிறந்த நேரம். தொழிலில் நல்ல இலாபம் உத்தியோகத்தில் நல்ல வருமானம் வேலை மாற்றம் மற்றும் சம்பள உயர்வு ஏற்பட நல்ல காலம். குழந்தைகளால் மகிழ்ச்சி நிகழும். தொழில் நன்றாக மேம்படும் வாரமாக அமைகிறது.

பாக்கியாதிபதி புதன் இராசியை பார்ப்பதும் முயற்சிகளை வெற்றி பெர சாதகமான வாரமாக அமைகிறது.

எட்டாம் அதிபதி 7ம் இடத்தில் சஞ்சரித்து இராசியை பார்ப்பது சிறப்பான அமைப்பு..

சந்திரன் இந்த வாரம் இராசிக்கு2,3,4 ம் இடத்தில் சஞ்சரிப்பதால் நல்ல தன வரவு ஏற்படலாம், முயிற்சிகள் வெற்றிகரமாக இருக்கும் அமைப்பு இருக்கும்.

செவ்வாய் கேதுவுடன் 8ம் இடத்தில் இணைவதால் வண்டி வாகனங்களில் கவனமாக இருப்பது நல்லது. நெருப்பு சம்பந்தபட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

 

அனுகூலமான நாட்கள் – 13,16,17

 

கும்பம் :

இராசிக்கு 4,9 அதிபதி சுக்ரன் ஆட்சி பெற்று 4ம் இடத்தில் இருந்து தொழில் ஸ்தானத்தை பார்க்கிறார். தாய் வழி ஆதரவு, வண்டி வீடு வாங்குவது சம்பந்தமான முயற்சிகள் நன்றாக அமைகிறது. மேலும் பாக்கியாதிபதி ஆட்சி பெறுவதால் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த விஷயங்கள் முயற்சிகள் இனிதே நிறைவேற சாதகமான நேரம்.

இராசிக்கு 7ம் அதிபதி சூரியன் 6ம் வீட்டில் நட்பு நிலையில் சஞ்சரிப்பது நல்ல சிறப்பு, நீண்ட நாட்கள் இருந்து வந்த கடன் நோய் வம்பு வழக்கு போன்றவைகள் முடிவுக்கு வரும் அருமையான வாரம். உத்தியோகத்தில் நல்ல மேன்மை ஏற்படும். .

இராசிக்கு தனாதிபதி மற்றும் இலாபாதிபதி குரு அஸ்தங்கம் நிலையில் இருந்து விடுபட்டு இராசியை பார்ப்பது நல்ல சிறப்பு. தந்தை வழி ஆதரவு கிடைக்கும். நீ்ண்ட நாட்கள் நிலுவையில் இருந்த விஷயங்கள் இனிதே நிறைவேரும் அற்புதமான வாரம்.

செவ்வாய் பார்வை இராசியில் இருப்பதனால் தைரியத்துடன் எந்த ஒரு செயலையும் செய்து முடிப்பீர்கள்.

இளைய சகோதர சகோதிரியினால் நல்ல ஆதரவு கிடைக்கும் வாரமாக அமைகிறது.

சந்திரன் இராசி,2 மற்றும் மூன்றாம் இடத்தில் சஞ்சரிப்பதால் நல்ல தெளிந்த சிந்தனை செயல்திறத்துடன் செயல்படுவீர்கள், தன வரவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் அமைதி மகிழ்ச்சி நிலவும். முயற்சிகள் நல்ல முடிவைத்தரும்.

அனுகூலமான நாட்கள் – 14,15,18,19.

 

மீனம் :

இராசிக்கு 3,8 அதிபதி சுக்ரன் 3ம் இடத்தில் ஆட்சி பெற்று இருப்பதால் முயற்சிகள் இனிதே நிறைவேறும். சிறு தூர பயணங்கள் சாதகமாக அமையும். இளைய சகோதரங்களால் ஆதரவு கிடைக்கும். திடீர் பண வரவு அதிர்ஷ்டம் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளது.

இராசிக்கு 2,9 அதிபதி செவ்வாய் சிம்மத்தில் நட்பு நிலையில் கேதுவுடன் சூட்சும வலு பெற்று தன் வீட்டையே பார்ப்பது சிறப்பான நிலை, பாக்கியாதிபதி பாக்கியஸ்தானத்தை பார்த்து வலு படுத்துகிறார்.  நல்ல தன வரவு, குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் நீண்ட நாட்கள் தடைபட்ட விஷயங்கள் நிறைவேற சாதகமான வாரம்

இராசிநாதன் மற்றும் 10 ம் அதிபதி குரு அஸ்தங்கம் நிலையில் இருந்து விடுபட்டு 8,10,12 ம் இடத்தை பார்ப்பதால் வெளியூர் வெளிமாநிலம் வெளிநாடு போன்ற முயற்சிகள் வெற்றியைத் தரும். சுப விரையங்கள் ஏற்படும் நல்ல வாரம்.

இராசியில் சனி சஞ்சரிப்பதால் மன அழுத்தம் வேதனை ஏற்பட்டு வந்த நிலையில் சனி வக்ர நிலைக்கு செல்வதால் இந்த மன அழுத்தம் சற்று விலகி நிம்மதியுடன் இருக்கும் அற்புதமான வாரமாக அமைகிறது.. சந்திரன் சனியுடன் இணையும் வார மத்தியில் சற்று மன சஞ்சலங்கள் குழப்பங்கள் ஏற்படலாம்.

வார இறுதியில் தன வரவு மேம்படும், வார ஆரம்பத்தில் குழந்தைகள் சம்பந்தப்பட்ட செலவுகள் ஏற்படலாம். .

அனுபூலமான நாட்கள் : 13,16,17

 

சுபம் !!!

 

தென்னேட்டி சுப்பராமன் ஶ்ரீராம்

9566620842 / 9944443215

astromanibharathy@gmail.com

 

 

 

 

 

 

 

 

Please follow and like us:

You May Also Like

More From Author