சென்னை : முத்தமிழறிஞர் கலைஞரின் 7ஆம் ஆண்டு நினைவுநாளையோட்டி, சென்னை அண்ணா சாலை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள முத்தமிழறிஞர் கலைஞரின் முழுவுருவச்சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த கலைஞரின் திருவுருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப்பேரணி தொடங்கி நடைபெற்றது. ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள கலைஞர் சிலையில் இருந்து கலைஞர் நினைவிடம் வரை பேரணி சென்றது. இந்த பேரணியில், உதயநிதி, கனிமொழி, அமைச்சர்கள், MP-க்கள், MLA-க்கள், திமுக நிர்வாகிகள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
மேலும் கட்சித் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பங்கேற்றனர். இறுதியாக, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
