இந்திய அஞ்சலக வங்கியில் கடந்த 8 ஆண்டுகளில் மொத்தம் 12 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்குகளை தொடங்கியுள்ளனர்.
இதில் தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களுக்கான உதவித்தொகை பெறும் கணக்குகளும் அடங்கும் இந்த அஞ்சலக வங்கியில் செல்போன் வங்கி சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தபால் காரரின் உதவியுடன் வாடிக்கையாளர் தங்களது தபால் வங்கி கணக்குகளில் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் அரசின் மானிய தொகைகளை எளிதாக பெற முடியும்.
அது மட்டுமில்லாமல் அஞ்சலக வங்கி கணக்குகளுடன் அஞ்சலக சிறுசேமிப்பு கணக்குகளையும் இணைத்து ஆன்லைனில் பண பரிவர்த்தனைகள் மேற்கொள்ள முடியும். மேலும் இதன்மூலம் செல்வமகள், தங்கமகன், அஞ்சலக சிறு சேமிப்பு திட்டங்கள், அஞ்சலக ஆய்வு காப்பீடு திட்டங்களுக்கு எளிமையான முறையில் ஆன்லைன் வாயிலாகவே பணம் செலுத்த முடியும் என்று பத்திரிக்கை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.