சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ 14ஆம் நாள் யுன்னான் மாநிலத்தின் நான்நிங் நகரில் தாய்லாந்து வெளியுறவு அமைச்சர் மாரிஸ், கம்போடிய துணைத் தலைமை அமைச்சரும் வெளியுறவு அமைச்சருமான பிராக் சோகோன், மியான்மார் வெளியுறவு அமைச்சர் தேன்ஸுவே, லாவோஸ் வெளியுறவு அமைச்சர் தோங்சவன், வியட்நாம் துணைத் தலைமை அமைச்சரும் வெளியுறவு அமைச்சருமான புய் தான் சன் ஆகியோரை முறையே சந்தித்துரையாடினார். லான்சாங்-மெய்கொங் ஒத்துழைப்புக்கான 10ஆவது வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அவர்கள் சீனாவுக்கு வருகை தந்துள்ளனர்.