சென்னை : வாக்கு திருட்டு விவகாரத்தை மடைமாற்றம் செய்யவே எதிர்கட்சியினர் மீது பாஜக அரசு ED-யை ஏவி விட்டுள்ளதாக ஆர்.எஸ்.பாரதி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதற்கு திமுகவினர் எவரொருவரும் மோடிக்கும் அஞ்ச மாட்டார்கள், EDக்கும் அஞ்சமாட்டார்கள். திமுகவின் தலைவரும் தொண்டர்களும் தமிழ்நாட்டின் பாதுகாவல் அரண் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஒடிசாவை ஆட்சி செய்வதா? எனக் கேட்ட அமித்ஷா, தமிழ், தமிழர்கள் என மதுரையில் வந்து நாடகம் ஆடுகிறார்.
2 ஆண்டுகளாக மணிப்பூர் கலவரத்தை அடக்க முடியாத பாஜக, தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை மணிப்பூராக மாற்றிவிடுவார்கள்.
வாக்கு திருட்டை திசை திருப்ப அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் மத்திய அரசின் கைப்பாவையான அமலாக்கத்துறை சோதனை என்ற பெயரில் அத்துமீறுகிறது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அமலாக்கத்துறையை ஏவி விடுவது வாடிக்கையாக இருக்கிறது.
மத்திய அரசு வாக்குகளில் முறைக்கேடு நடந்துள்ள விஷயத்தை திசை திருப்ப அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை என்ற பெயரில் அத்துமீறுகிறது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அமலாக்கத்துறையை ஏவி விடுவது வாடிக்கையாக இருக்கிறது. ED-க்கும் மோடிக்கும் அஞ்சமாட்டோம். சட்டப்படி எதிர்கொள்வோம்.
பாஜக வாசிங் மிஷினில் விழுவதற்கு நாங்கள் தவறு செய்தவர்கள் அல்ல. பொய் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர்கள். பொய் வழக்கு போடப்பட்டவர்கள். அதனை நீதிமன்றத்தில் நிரூபித்து காட்டி, வெளியே வருவோமே தவிர, பாஜக வாசிங் மிஷினில் கழுவி, வழக்குகளை வாபஸ் பெற திமுகவினர் கோழைகள் அல்ல. சுயமரியாதை பாதையில் வந்தவர்கள். அடக்குமுறைக்கு அஞ்சாதவர்கள். அவசரகால நெருக்கடிகளை போல எத்தனையோ தழும்புகளுக்கு சொந்தக்காரர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.