காந்தி கிராமம் கிராமிய பல்கலைக்கழகத்தில் உட்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் – துணைவேந்தர் சந்தித்து கோரிக்கை மனு வழங்கிய ABVP மாணவர் அணி!

Estimated read time 1 min read

காந்தி கிராமம் கிராமிய பல்கலைக்கழகத்தில் அடிப்படை வசதியை மேம்படுத்தி தர வேண்டும் என்று துணை வேந்தரை சந்தித்து கோரிக்கை மனுவை ABVP மாணவர் அணியினர் வழங்கினார்கள்.

திண்டுக்கல்லில் உள்ள காந்திகிராம் கிராமிய பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் அதிகம் பயன்படுத்தும் கலையரங்கம் மேல் கூரை மற்றும் உள்கட்டமைப்பு பல இடங்களில் பழுதடைந்ததுடன், முற்றிலும் பராமரிப்பு இன்றி ஆபத்தான நிலையில் உள்ளது.

மேலிருந்து விழும் இதழ்கள் மற்றும் இரும்புப் பொருட்கள் மாணவர்களின் தலையில் விழும் அபாயம் மிகுந்து காணப்படுகிறது என்று அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ABVP) அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ABVP திண்டுக்கல் சார்பாக காந்திகிராமம் கிராமிய பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரை சந்தித்து மாணவர்கள் பாதுகாப்பு, உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த கோரி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

Please follow and like us:

You May Also Like

More From Author