சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. குமரி கடலை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதேபோல் கோவை, நீலகிரி மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்டும், தேனி, தென்காசி மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்பதால் மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் 9-ம் தேதி வரை மழை நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
சென்னை நிலவரம்
வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
