ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாடு ஆகஸ்டு 31ஆம் நாள் நடைபெறவுள்ளது. இந்த அமைப்பு நிறுவப்பட்டது முதல் இதுவரை மிகப் பெரிய அளவில் நடைபெறும். ஒற்றுமையுடன் ஒத்துழைப்பானது, இந்த அமைப்பு உலகளாவிய அறைக்கூவல்களைச் சமாளிப்பதற்கான முக்கிய அம்சமாகும். சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என் உலகளாவில் நடத்திய கருத்துக் கணிப்பின்படி, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு பெற்றுள்ள பயனுள்ள ஒத்துழைப்புச் சாதனைகளையும், சீனாவின் முக்கிய பங்குகளையும், இந்தக் கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்கள் பாராட்டினர்.
கடந்த ஓராண்டில், தலைமைப் பொறுப்பில் இருக்கும் நாடான சீனா, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புகளை ஆழமாக்கி வருகிறது. உறுப்பு நாடுகளின் பொருளாதாரத்தில் இந்த அமைப்பு ஆக்கபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று 91.7 விழுக்காட்டினர் பாராட்டு தெரிவித்தனர். மேலும், பிரதேச பாதுகாப்பைப் பேணிக்காப்பதற்கான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ஆக்கபூர்வமான பங்கிற்கு 83.7 விழுக்காட்டினர் பாராட்டு தெரிவித்தனர்.
ஷாங்காய் ஒத்துழைப்பின் வளர்ச்சியை முன்னேற்றுவதற்கு சீனா எப்போதுமே பங்காற்றி வருகிறது. இந்தக் கருத்துக் கணிப்பின்படி, இவ்வமைப்பின் உறுப்பு நாடுகள் பிரதேசப் பாதுகாப்பைப் பேணிக்காத்து, பிரதேசப் பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றுவது உள்ளிட்ட துறைகளில் சீனா நடத்திய ஒத்துழைப்புகளை 91.4 விழுக்காட்டினர் பாராட்டினர்.
உலகளாவிய 38 நாடுகளைச் சேர்ந்த 8873 பேர் இந்தக் கருத்து கணிப்பில் பங்கேற்றனர்.