அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையனை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கிய எடப்பாடி பழனிசாமி எடுத்த முடிவு சர்வாதிகாரமாகும் என எதிரணியினர் விமர்சித்துள்ளனர். ஆனால், EPS ஆதரவாளர்கள், “இது ஜெயலலிதா போல் தைரியமான தீர்மானம்” எனக் கூறி பாராட்டியுள்ளனர். BJP சார்பில் மீண்டும் ஒன்றிணைய அழுத்தம் கொடுக்கப்பட்டாலும், அதனை EPS உறுதியாக நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், பொதுச்செயலாளர் பதவியைச் சார்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு கிடைத்திருப்பது EPS-க்கு பலம் சேர்த்துள்ளது.
BJP அதிகப்படியாக அழுத்தம் கொடுத்தால், அவர்களை விட்டு விலகி, தமிழக வெற்றிக் கழகத்துடன் (TVK) கூட்டணி அமைக்கும் வாய்ப்பையும் EPS ஆலோசித்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் பரபரப்பாக பேசுகின்றன.