பள்ளிகளில் சாதி அடிப்படையிலான வன்முறைகள் அதிகரிக்கக் கூடாது என்பதற்காக, பள்ளிக்கல்வித்துறை மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு கடும் உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதன்படி, சாதிய எண்ணங்களோடு ஆசிரியர்கள் எந்தவிதமான விதிமீறலிலும் ஈடுபட்டால், அவர்களை உடனடியாக வேறு பள்ளிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களின் சாதிய அடையாளங்களை முழுமையாக ரகசியமாக வைத்திருக்க பள்ளிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளது.
சாதிய உணர்வுகளை வளர்க்கும் செயல்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் பள்ளிகளில் பணியாற்றக் கூடாது என்பதும், அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதும் கல்வித்துறையின் முக்கிய உத்தரவாக வெளியிடப்பட்டுள்ளது.