டெல்லி : இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன் வாக்காளர் பட்டியலில் சேர்ந்ததாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய கோரும் மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த மனுவை விகாஸ் திரிபாதி என்பவர் தாக்கல் செய்தார்.
இந்த மனுவில், சோனியா காந்தி ஏப்ரல் 30, 1983 அன்று இந்திய குடியுரிமையைப் பெற்றதாகவும், ஆனால் அவரது பெயர் 1980 ஆம் ஆண்டு டெல்லி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் எஃப்ஐஆர் பதிவு செய்து இந்த விவகாரத்தை விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் விகாஸ் திரிபாதி குற்றம்சாட்டியிருந்தார்.
சோனியா காந்தி இத்தாலிய குடிமகனாக இருந்தபோது, 1980-ல் வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் எவ்வாறு சேர்க்கப்பட்டது என்ற கேள்வியை மனுவில் எழுப்பப்பட்டிருந்தது. இது தவிர, 1982-ல் வாக்காளர் பட்டியலில் இருந்து தனது பெயர் நீக்கப்பட்டதாகவும் மனுதாரர் குற்றம் சாட்டினார், ஆனால் இதற்கான காரணமும் தெளிவாகத் தெரியவில்லை.
குடியுரிமை பெறுவதற்கு முன்பு சோனியா காந்தியின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்தது ஒரு கடுமையான முறைகேடு என்றும், அது மோசடியாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் புகார்தாரர் குற்றம் சாட்டியுள்ளார்.
இருப்பினும், புகார்தாரர் 1983 மற்றும் 2023 க்கு இடையில் தேதியில் தற்செயலாக பிழை செய்தாரா அல்லது அது தட்டச்சுப் பிழையா என்பது தெளிவாகத் தெரியவில்லை. புகார்தாரரின் கூற்றுக்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என் கண்டறிந்துள்ள நீதிமன்றம், முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்ய உத்தரவிட மறுத்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.