இந்தியா, அமெரிக்காவின் முக்கியமான நட்பு நாடாகும் என்பதைக் குறிப்பிட்டுள்ள இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதர் செர்ஜியா கோர், இந்தியா சீனாவுடன் நெருக்கம் காட்டுவது கவலையளிக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்ததாவது, “இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே நீண்டகால மூலோபாயத் திட்டங்கள் உள்ளன. வர்த்தக பிரச்சனைகள் முற்றுப்பெறும் வாய்ப்பு உள்ளது. வரிவிதிப்புகள் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையில் பெரிய பிளவு இல்லை. எதிர்வரும் வாரங்களில் இதுகுறித்து முன்னேற்றம் ஏற்படலாம்,” என்றார்.
சீனாவை விட, இந்தியாவுக்கு அமெரிக்காவுடன் அதிகமான பொதுவான அடிப்படைத் தரநிலைகள் இருப்பதாகவும், இரு நாடுகளுக்கும் இடையே உள்ள கூட்டுறவு மீண்டும் வலுப்பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தியாவின் சீனாவுடனான நெருக்கம் கவலையளிக்கிறது: புதிய அமெரிக்க தூதர் செர்ஜியா கோர் கருத்து
