சீனா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் அதிகாரப்பூர்வமற்ற சந்திப்புக்கு சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ 21ஆம் நாள் பெய்ஜிங்கில் தலைமை தாங்கினார். பாகிஸ்தான் துணை தலைமை அமைச்சரும் வெளியுறவு அமைச்சருமான தார், ஆப்கானிஸ்தான் தற்காலிக வெளியுறவு அமைச்சர் முத்தாசி இருவரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர். சீன, ஆப்கான், பாகிஸ்தான் பேச்சுவார்த்தை எட்டியுள்ள சாதனைகளை மூன்று நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பாராட்டினர். 3 தரப்பு அமைப்பு முறையின் வளர்ச்சி வாய்ப்புகளை அதிகரிப்பது மற்றும் ஒன்றுக்கு ஒன்று நலன் தரும் ஒத்துழைப்புகளை முன்னேற்றுவது குறித்து கருத்துகளைப் பரிமாற்றி கொண்டனர்.
வாங் யீ கூறுகையில்,
அரசியல் நம்பிக்கையை அதிகரிப்பது, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற முன்மொழிவைக் கூட்டாக கட்டியமைப்பது, பயங்கரவாதத்துக்கு எதிர்ப்பு முதலிய 7 சாதனைகள் இச்சந்திப்பில் எட்டப்பட்டன என்றார்.