இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
ஆசியக் கோப்பை 2025 சூப்பர்–4 சுற்றில் வங்கதேசத்திற்கு எதிராக நடைபெற்ற போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 168 ரன்கள் குவித்தது.
பின்னர் இலக்கை துரத்தி களமிறங்கிய வங்கதேச அணியில் சைப் ஹசன் (69) மட்டுமே பொறுப்புடன் ஆடினார். ஆனால், மற்ற வீரர்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பியதால் அணி தடுமாறியது.
இந்திய பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சு காரணமாக வங்கதேசம் தேவையான ரன்களை எடுக்க முடியாமல் போனது இந்நிலையில் , இந்திய அணி எளிதில் 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிக்கு முன்னேற்றியது.