தமிழ்நாட்டில் 1ம் வகுப்பிலிருந்து 8ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த காலாண்டுத் தேர்வுகள் இன்று (செப்டம்பர் 25) நிறைவடைந்தன.
இதையடுத்து, பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருப்பதின்படி நாளை (செப்டம்பர் 26) முதல் அக்டோபர் 5ஆம் தேதி வரை 10 நாட்கள் காலாண்டு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுடன் மாணவ, மாணவிகள் ஆனந்தமாக துள்ளிக்குதித்து வீடுகளுக்கு புறப்பட்டனர்.
இந்த விடுமுறையை பயன்படுத்தி சொந்த ஊர்களுக்குச் செல்லும் மாணவர்களும் பெற்றோர்களும் அதிகமாக இருப்பதால், வரும் நாட்களில் ரயில்கள் மற்றும் பேருந்துகளில் பெரும் கூட்டம் கூட வாய்ப்பு உள்ளது. எனவே, போக்குவரத்து துறையினர் கூடுதல் வசதிகளை ஏற்படுத்த திட்டமிட்டு வருகின்றனர்.