முதல் பரிசு ரூ.50 ஆயிரம்..! அஞ்சல் துறை சார்பாக கடிதம் எழுதும் போட்டி..!

Estimated read time 1 min read

இந்திய அஞ்சல் துறை சார்பில் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி செப்டம்பர் 8 முதல் டிசம்பர் 8 வரை நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் அனைத்து வயதினரும் பங்கு பெறலாம்.

போட்டிக்கான கடிதத்தை, “எனது முன்மாதிரிக்கு கடிதம்” “Letter to My Role Model” என்ற தலைப்பில் தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி இவற்றில் ஏதாவது ஒரு மொழியில் எழுதி ‘முதன்மை அஞ்சல் துறை தலைவர், தமிழ்நாடு வட்டம், சென்னை – 600002’ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். உள்நாட்டு கடித பிரிவில் (Inland Letter Card) 500 வார்த்தைகளுக்கு மிகாமலும், கடித உறை பிரிவில் (Envelope) 1000 வார்த்தைகளுக்கு மிகாமலும் கைப்பட எழுத வேண்டும்.

“1.1.2025 அன்று 18 வயது நிறைவு பெற்றவர் / நிறைவு பெறாதவர்” என்ற வயது சான்று கடிதத்தில் கண்டிப்பாக இடம் பெற்றிருக்க வேண்டும். போட்டியில் பங்குபெறுவோரின் பெயர் மற்றும் இருப்பிட முகவரியை கடிதத்தில் தவறாமல் குறிப்பிட வேண்டும்.

இந்த போட்டியில் மாநில அளவில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.25,000, இரண்டாம் பரிசு ரூ.10,000 மற்றும் மூன்றாம் பரிசு ரூ.5,000 வழங்கப்படும். தேசிய அளவில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.50,000, இரண்டாம் பரிசு ரூ.25,000 மற்றும் மூன்றாம் பரிசு ரூ.10,000 வழங்கப்படும். பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் அனைவரும் இப்போட்டியில் பங்குபெற்று பயனடையலாம்.

Please follow and like us:

You May Also Like

More From Author