சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங் அண்மையில், தியன்ஜின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்குப் பதில் கடிதம் ஒன்றை அனுப்பி, தியன்ஜின் பல்கலைக்கழகம் நிறுவப்பட்ட 130ஆவது ஆண்டு நிறைவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இக்கடிதத்தில் ஷி ச்சின்பிங் கூறுகையில், புதிய துவக்கத்தில், புதிய யுகத்தின் சீனத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த சோஷலிசச் சிந்தனையை நீங்கள் வழிகாட்டலாகக் கொண்டு, கல்வி மற்றும் அறிவியல் ஆய்வுச் சீர்திருத்தத்தை ஆழாமாக்கி, திறமைசாலிகளை வளர்ப்பதற்கான தரத்தை உயர்த்தி, பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சிக்கு மேலும் நன்றாக சேவை புரிந்து, சீன நவீனமயமாக்கத்தை முன்னேற்றுவதற்குப் புதிய பங்காற்ற வேண்டும் என்று
விருப்பம் தெரிவித்தார்.
தியன்ஜின் பல்கலைக்கழகம் 1895ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. சீனாவின் முதலாவது நவீனப் பல்கலைக்கழகம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.