சீனாவின் மனிதரை ஏற்றிச்செல்லும் விண்வெளிப் பயண அலுவலகம் பிப்ரவரி 29ஆம் நாள் வெளியிட்ட தகவலின்படி, விண்வெளி நிலையத்தின் பயன்பாடு மற்றும் வளர்ச்சி, மனிதர் சந்திர மண்டல ஆய்வு ஆகிய 2 கடைமைகள் இவ்வாண்டு முன்னேற்றப்படும்.
விண்வெளி துறை வல்லரசின் கட்டுமானம் என்ற இலக்கை நோக்கி சீனா உறுதியாக முன்னேறும். தற்போது, சீன விண்வெளி நிலையத்தின் பயன்பாடு மற்றும் வளர்ச்சிக்கான பல்வேறு பணிகள் திட்டப்படி நிதானமாக முன்னேற்றப்பட்டு வருகின்றன.
மனிதர் சந்திர மண்டல ஆய்வுக்கான பல்வேறு கட்டுமானங்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன.
அமைதியாகப் பயன்படுத்துவது, சமத்துவ முறையில் ஒன்றுக்கு ஒன்று நலன் தருவது, கூட்டாக வளர்வது ஆகியவை, சீனாவின் மனிதரை ஏற்றிச்செல்லும் விண்வெளி லட்சியத்தின் கோட்பாடு ஆகும்.
உலகின் பல்வேறு நாடுகள் குறிப்பாக வளரும் நாடுகளுடன் மனிதரை ஏற்றிச்செல்லும் விண்வெளி வளர்ச்சியின் சாதனைகளைப் பகிர்ந்து கொண்டு, உலக விண்வெளித் தொழில் நுட்பத்தின் வளர்ச்சிக்கும், விண்வெளியின் அமைதிப் பயன்பாட்டுக்கும் ஆக்கமுடன் பங்காற்ற சீனா விரும்புகிறது.