தண்ணீரை பணம் போல் செலவழிக்க வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

Estimated read time 1 min read

சென்னை :தமிழ்நாடு முழுவதும் உள்ள 12,480 கிராமங்களில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. இதில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி வாயிலாக உரையாற்றவுள்ளார்.

கிராம மக்களின் தேவைகளை அறிந்து அவற்றைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்தக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, கிராமப்புற மாணவர்களுக்கான “நான் முதல்வன்” திட்டம் முக்கிய இடம்பெறும். இது, கிராமங்களின் முன்னேற்றத்திற்கு அடிப்படை அம்சமாக இருக்கும்

.முதல்வர் ஸ்டாலின், “நம் நாட்டின் முதுகெலும்பு கிராமங்கள்தான். விடுதலை இந்தியாவின் வலிமை கிராமங்கள் என காந்தி கூறினார்” என்று நினைவூட்டினார். கிராம பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும், நிர்வாகங்களை வலுப்படுத்துவதற்கும் தீட்டப்பட்ட திட்டங்கள் இந்தக் கூட்டங்களில் விவாதிக்கப்படும். “இத்திட்டங்கள் தமிழ்நாட்டின் கிராம ஊராட்சிகளின் மேம்பாட்டிற்கு அடிப்படை” என்று அவர் கூறினார். முதல்வராக மூன்றாவது முறையாக கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்பதில் பெருமை கொள்கிறேன் என்றும் தெரிவித்தார்.

இந்தியாவில் எந்த முதலமைச்சரும் இதுபோன்ற கிராம சபைக் கூட்டங்களில் இணையம் மூலம் பங்கேற்கவில்லை. தமிழ்நாட்டில் 10,000-க்கும் மேற்பட்ட ஊராட்சி நிலையங்களை இணைத்து நடத்தப்படும் இந்தக் கூட்டம் முதல் முறை. கிராம சபைக் கூட்டங்களில் காணொளி காட்சி மூலம் முதல்வர் உரையாற்றுவது, கிராமங்களின் வளர்ச்சியை விரைவுபடுத்தும்.

விழாவில் பேசிய ” முதல்வர் மு.க.ஸ்டாலின் பிளாஸ்டிக் பயன்பாட்டை முடிந்த அளவுக்கு தவிருங்கள் சின்னச் சின்ன விஷயங்களை சரியாக செய்தால், பெரிய பெரிய மாற்றங்கள் ஏற்படும். கிராம சபை கூட்டம் -முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு தண்ணீரை பணம் போல், பார்த்து பார்த்து செலவு செய்யுங்கள் பருவமழையை எதிர்கொள்ள அனைத்து ஊராட்சிகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், கிராமப்புற முன்னேற்றத்தை சாத்தியப்படுத்தியது சுய உதவிக்குழு (SHG) திட்டம். மகளிர் சுய உதவிக்குழுக்களின் அடுத்தக் கட்டமாக மகளிர் உதவித்தொகை திட்டம், விடியல் பயணத் திட்டம் போன்றவை பெண்களின் முன்னேற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்தத் திட்டங்கள் கிராம சபைக் கூட்டங்களில் விவாதிக்கப்பட்டு, செயல்படுத்தப்படும்.

Please follow and like us:

You May Also Like

More From Author