அக்டோபர் 16ஆம் நாள் உலகத் தானிய தினமாகும். சீன வேளாண்மை மற்றும் ஊரகவிவகார அமைச்சகம் புதிதாக நடத்திய ஆய்வின்படி, நாடு முழுவதிலும் 60
விழுக்காட்டுக்கும் மேலான இலையுதிர்காலத் தானியங்கள் அறுவடை செய்யப்பட்டுள்ளது.
14ஆவது ஐந்தாண்டுத் திட்டக்காலத்தில், தேசியத் தானிய பாதுகாப்பு நெடுநோக்கு
திட்டத்தை சீனா மேற்கொண்டு, தானிய பாதுகாப்பு அடிப்படையைப் பன்முகங்களிலும்
வலுப்படுத்தி வருகிறது. தரவுகளின்படி, சீனாவில் நபர்வாரி தானிய
தரவுகளின்படி, சீனாவில் நபர்வாரி தானிய அளவு 500 கிலோகிராமை
எட்டியுள்ளது. இது, சர்வதேச அளவில் ஏற்கப்பட்ட 400 கிலோகிராம் என்ற அளவை விட
அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.