தீப ஒளித் திருநாளான தீபாவளியை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி உட்பட நாட்டின் தலைவர்கள் அனைவரும் திங்கட்கிழமை (அக்டோபர் 20) அன்று மக்களுக்குத் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
பிரதமர் மோடி எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்ட செய்தியில், இந்தப் பண்டிகை மக்களின் வாழ்வில் ஒற்றுமை, மகிழ்ச்சி மற்றும் செழிப்பை ஒளிரச் செய்யும் என்றும், எங்கும் நேர்மறை உணர்வு நிலவ வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது வாழ்த்துச் செய்தியில், தீபாவளி இருளை வென்று ஒளி, அறியாமையை வென்று அறிவு, தீமையை வென்று நன்மை ஆகிய வெற்றிகளின் நித்தியச் சின்னம் என்று வலியுறுத்தினார்.
குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பொதுமக்களுக்கு தீபாவளி வாழ்த்து
