சி.ஆர்.450 எனப்படும் சீனாவின் அடுத்த தலைமுறைக்கான அதிவேக ரயில் சமீபத்தில் நடைபெற்ற சோதனை ஓட்டத்தில் புதிய சாதனையை படைத்துள்ளது. செயல்பாட்டுச் சோதனையில் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய இந்த புல்லட் ரயில் மணிக்கு 453 கிலோமீட்டர் என்ற வேகத்தில் இயக்கப்பட்டது. இரண்டு ரயில்கள் ஒன்றையொன்று கடந்து செல்லும்போது, மணிக்கு 896 கிலோமீட்டர் என்ற ஒப்பீட்டளவில் அதன் வேகம் பதிவு செய்யப்பட்டது.
0 முதல் மணிக்கு 350 கிலோமீட்டர் வரையான வேகத்தை எடுவதற்கு 4 நிமிடங்கள் 40வினாடிகள் மட்டும் தேவைப்படுகிறது. தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ள சி.ஆர்.400 ரயிலுடன் ஒப்பிடும்போது இது 100 வினாடிகள் குறைவு ஆகும்.
சி.ஆர். 450 அதிவேக ரயில் மாதிரி 2024ஆம் ஆண்டு டிசம்பரில் பொது மக்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்த புதிய தலைமுறை ரயில் பல உலக சாதனைகளை உருவாக்கியுள்ளது.
வணிக ரீதியாக பயன்பாட்டிற்கு வரும் முன், இந்த புதிய தலைமுறை அதிவேக ரயில் இன்னும் 6 லட்சம் கிலோமீட்டர் தூரம் வரை பல்வேறு சூழ்நிலைகளில் கடுமையான பல சோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
சி.ஆர்.450 ரயிலின் ஆராய்ச்சி மற்றும் தயாரிப்பு, சீனாவின் 14வது ஐந்தாண்டுத் திட்டத்தைச் சேர்ந்த 102 முக்கிய தேசிய செயல்திட்டங்களில் ஒன்றாகும்.
