பெண்கள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை..!

Estimated read time 1 min read

மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதவர்கள் எங்களுக்கும் உரிமைத் தொகை கிடைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடக்க உள்ள நிலையில் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களின் ஓட்டுகள் எதிர்க்கட்சிகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு மகளிர் உரிமைத் தொகை கிடைக் காதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி தமிழ்நாடு முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடத்தப்பட்டு அதில் விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

இதில் இதுவரை 28 லட்சம் மகளிர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் தகுதியானர்களுக்கு டிசம்பர் 15-ந்தேதி முதல் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்திருந்தார். அதன்படி தகுதியான பயனாளிகளை இறுதி செய்யும் பணிகளில் வருவாய்த் துறையினர் கவனம் செலுத்தி வருகின்றனர்.

நவம்பர் 30-ந்தேதிக்குள் விண்ணப்பங்களை பரிசீவித்து முடிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் பல்வேறு காரணங்களை கூறி விண் ணப்பங்களை நிராகரிப்பதாக பொது மக்கள் பலர் அமைச்சர்களிடம் முறையிட்டு வந்தனர்.

அதனை தொடர்ந்து உரிய காரணம் இன்றி விண்ணப்பங்களை நிராகரிக்ககூடாது என்று வருவாய்த் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வருமான வரி செலுத்தும் குடும்பத்தினரை தவிர்த்து மற்ற குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்க நிதித்துறை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதனால் புதிய பயனாளிகளுக்கு டிசம்பரில் இருந்து மகளிர் உரிமைத் தொகை கிடைத்துவிடும் என்று கூறப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author