சென்னை நுங்கம்பாக்கத்தில் பஞ்சாப் இன்வெஸ்ட் என்ற பெயரில் முதலீட்டாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக பஞ்சாப் மாநில வர்த்தகத்துறை அமைச்சர் சஞ்சீவ் அரோரா கலந்து கொண்டார்.
அப்போது பேட்டியளித்த அவர், பஞ்சாபில் 2022ம் ஆண்டு முதல் தற்போது வரை ஒரு லட்சத்து 37 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும், 5 லட்சம் பேருக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
