தென்குமரிக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாகத் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதன் எதிரொலியாக, மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி, மதுரை மாவட்டத்தில் இன்று (நவ. 24) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். எனினும், கல்லூரிகள் வழக்கம் போலச் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை அபாயம் நீடிப்பதால், பொதுமக்கள் அத்தியாவசியத் தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
