தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே துரைசாமிபுரத்தில் இன்று காலை இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான கோர சம்பவத்தில் 8 பயணிகள் உயிரிழந்தனர்.
மேலும் 28-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள இடைகால் துரைசாமிபுரம் பகுதியில் இன்று (நவம்பர் 24) காலை சுமார் 11 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
கடையநல்லூர் நோக்கி வந்து கொண்டிருந்த கே.எஸ்.ஆர் என்ற தனியார் பேருந்தும், கோவில்பட்டியில் இருந்து தென்காசி நோக்கி சென்ற எம்.ஆர்.கோபாலன் என்ற தனியார் பேருந்தும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்து நடந்த இடத்திற்கு உடனடியாக வந்த போலீசார், பொதுமக்கள் உதவியுடன் மீட்புப் பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டு வருகின்றனர்.
தென்காசி அருகே இரண்டு பேருந்துகள் மோதல்; 8 பேர் பலி, பலர் காயம்
