சில மாதங்களுக்கு முன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்து கையெழுத்திட்ட “தங்க அட்டை” (Trump Gold Card) என்றழைக்கப்படும் விசா திட்டம் இன்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அசாதாரண திறமைகள் கொண்ட வெளிநாட்டவர்களை அமெரிக்காவிற்கு ஈர்க்கும் நோக்கில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், தனிநபர்கள் அமெரிக்காவில் நிரந்தர சட்டப்பூர்வ குடியுரிமை (Residency) பெற வேண்டுமென்றால், அவர்கள் $1 மில்லியன் முதலீடு செய்ய வேண்டும்.
நிறுவனங்களைப் பொறுத்தவரை, $2 மில்லியன் முதலீடு செய்வதன் மூலம் அவர்கள் தங்கள் ஊழியர்களுக்கு விசா ஆதரவு (Sponsor) வழங்கலாம். இது “கார்ப்பரேட் தங்க அட்டை” (Trump Corporate Gold Card) என்று அழைக்கப்படுகிறது.
அதிபர் டிரம்ப்பின் Gold Card விசா திட்டம் இன்று முதல் அமல்
