மகாராஷ்டிர மாநிலம் புனேயில் பணியமர்த்தப்பட்ட பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி, அதிகார துஷ்பிரயோகத்தால் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
2023-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான பூஜா கேத்கர், மத்திய மகாராஷ்டிராவின் வாஷிம் மாவட்டத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதிகாரப்பூர்வ கடிதத்தின்படி, அவர் ஜூலை 30, 2025 வரை “சூப்பர்நியூமரி உதவி கலெக்டராக” பணியாற்றுவார்.
தனக்கு ஒரு தனி அறை, கார், குடியிருப்பு மற்றும் ஒரு பியூன் வழங்க வேண்டும் என்று பதவியில் சேர்வதற்கு முன்பே பூஜா கேத்கர் பலமுறை கேட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
பூஜாவின் கோரிக்கையை கேட்ட அதிகாரிகள், பயிற்சி காலங்களில் இதுபோன்ற வசதிகள் வழங்கப்படுவதில்லை என்று கூறினர்.
ஐஏஎஸ் ஆவதற்கு முன்பே அதிகார தலைக்கனத்தில் ஆடிய பெண் பணியிட மாற்றம்
