புதிய நிலைமை பற்றிய ஆராய்ச்சியில் பெரிய பொருளாதார மாநிலங்கள் அனுபவம் பெற வேண்டும்:ஷிச்சின்பிங்

Estimated read time 1 min read

புதிய நிலைமையை ஆராய்ந்து புதிய பிரச்சினைகளைத் தீர்ப்பதில் பெரிய பொருளாதார மாநிலங்கள் முயற்சி மேற்கொண்டு அனுபவம் அடைய வேண்டும் என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவரும் ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.

14ஆவது தேசிய மக்கள் பேரவையின் 4ஆவது கூட்டத்தொடரில் ஜியாங்சூ மாநிலப் பிரதிநிதிக் குழுவின் பரிசீலனையில் ஷிச்சின்பிங் மார்ச் 5ஆம் நாள் பிற்பகல் பங்கேற்ற போது இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில், 15ஆவது ஐந்தாண்டு திட்டக்காலத்தில் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கான இலக்குகளை நிறைவேற்ற, சிக்கலான சூழ்நிலையை சமாளித்து ஆழ்ந்த நிலையிலான அதிக முரண்பாடுகளைத் தீர்க்க வேண்டும். ஜியாங்சூ உள்ளிட்ட பெரிய பொருளாதார மாநிலங்கள் சீர்திருத்தம் மற்றும் திறப்புப் பணியில் முன்னணியில் உள்ளன. புதிய நிலைமையை ஆராய்ந்து புதிய பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அவை முயற்சி மேற்கொண்டு அனுபவம் அடைய வேண்டும் என்று குறிப்பிட்டார்.

புதிய ரக தொழில்மயமாக்கத்தை முன்னேற்றுவது, அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை புத்தாக்கத்தின் ஒருங்கிணைப்பை ஊக்குவிப்பது, முக்கிய தொழில்நுட்ப முன்னேற்றத்தை வலுப்படுத்துவது, இணக்கமான அழகான கிராமப்புறத்தை கட்டமைப்பது, விதை தொழிலில் பிரச்சினைகளைத் தீர்ப்பது, விளையாட்டு எழுச்சியை மேம்படுத்துவது ஆகியவை பற்றி 6 பிரதிநிதிகள் முறையே உரை நிகழ்த்தினர். அவர்களின் உரைகளைக் கேட்டறிந்த பிறகு உரை நிகழ்த்திய ஷிச்சின்பிங், 15ஆவது ஐந்தாண்டு திட்டக்கால வளர்ச்சிக்காக ஜியாங்சூவின் நிலைமைக்கேற்ற கோரிக்கைகளை முன்வைத்தார்.

 

Please follow and like us:

You May Also Like

More From Author