புத்தின் சீன பயணம் பற்றிய அறிமுகம்

ரஷிய அரசுத் தலைவர் புத்தின், சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொள்ளவுள்ளார். இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் கோ ஜியாகுன் 18ஆம் நாள் அறிமுகம் செய்தார்.

அப்போது அவர் கூறுகையில்,

புத்தினின் சீன பயணம் இது 25ஆவது  ஆகும். இப்பயணத்தின் போது, இரு நாட்டு அரசுத் தலைவர்கள், இருதரப்புறவு, பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்பு, பொது அக்கறை கொண்ட சர்வதேச மற்றும் பிரதேச பிரச்சினைகள் ஆகியவை குறித்து கருத்துகளைப் பரிமாறி கொள்வர். கடந்த சில ஆண்டுகளில், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் மற்றும் ரஷிய அரசுத் தலைவர் புத்தினின் நெடுநோக்கு வழிகாட்டலில், புதிய யுகத்தில் சீன-ரஷிய பன்முக நெடுநோக்கு ஒத்துழைப்பு கூட்டாளியுறவு ஆழமாக வளர்ந்து வருகின்றது. சீன-ரஷிய நெடுநோக்கு ஒத்துழைப்பு கூட்டாளியுறவு நிறுவப்பட்ட 30ஆவது ஆண்டு நிறைவாகவும், சீன-ரஷிய அண்டை நாட்டு நட்புறவு உடன்படிக்கை கையொப்பமிடப்பட்ட 25ஆவது ஆண்டு நிறைவாகவும் இவ்வாண்டு திகழ்கின்றது. இருதரப்பும், இவற்றை வாய்ப்பாக கொண்டு, இரு நாட்டுறவின் வளர்ச்சியை முன்னேற்றி, உலகிற்கு மேலதிகமான நிலைப்புத்தன்மையையும் உந்து ஆற்றலையும் வழங்கும் என்றார்.

Please follow and like us:

You May Also Like

More From Author