காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Estimated read time 1 min read

உலகப்பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவத்தையொட்டி தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

இக்கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா, கடந்த 28-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 7-ஆம் நாளான இன்று திருத்தேர் உற்சவம் நடைபெற்றது.

இதனை முன்னிட்டு அதிகாலை முதலே வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.

தொடர்ந்து சுமார் 100 டன் எடையும், 76 அடி உயரமும் , ஐந்து நிலைகளும் கொண்ட திருத்தேரில், கொண்டை முடிச்சு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக வரதராஜ பெருமாள் எழுந்தருளினார்.

அமைச்சர்கள் ரமேஷ், ரஞ்சித் குமார், தென்னரசு மற்றும் ஆட்சியர் சினேகா உள்ளிட்டோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

You May Also Like

More From Author