பெண் குழந்தைகள் மற்றும் மகளிர்களின் கல்வி வளர்ச்சி பற்றிய பெங் லீயுவான் உரை
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் மனைவியும், பெண் குழந்தைகள் மற்றும் மகளிர்கள் கல்வி முன்னேற்றத்திற்கான யுனெஸ்கோவின் சிறப்பு தூதருமான பெங் லீயுவான் அம்மையார் மற்றும் யுனெஸ்கோவின் பொது இயக்குநர் ஆட்ரி அசோலே ஆகியோர் செப்டம்பர் 28ஆம் நாள் முற்பகல், 2023ஆம் ஆண்டு யுனெஸ்கோவின் பெண் குழந்தைகள் மற்றும் மகளிர்கள் கல்விக்கான பரிசு வழங்கும் விழாவில் கூட்டாகப் பங்கெடுத்து தனித்தனியாக உரை நிகழ்த்தினர்.
பெங் லீயுவான் கூறுகையில், சீனாவுக்கும், யுனெஸ்கோவுக்கும் இடையிலான நெருங்கிய ஒத்துழைப்பு, உலகளவில் பெண் குழந்தைகள் மற்றும் மகளிர்களின் கல்வி வளர்ச்சிக்கு முன்மாதிரியாக விளங்கி, மதிப்புள்ள அனுபவங்களை வழங்கியுள்ளது. பெண்களின் கல்வி உரிமையைப் பேணிக்காப்பதற்கு சீனா முக்கியத்துவம் அளித்து வருகிறது. பல்வேறு துறைகளுடன் இணைந்து சர்வதேச பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புகளை முன்னேற்றி, உலக பெண் குழந்தைகள் மற்றும் மகளிர்களின் கல்வி லட்சியத்தின் உயர்தர வளர்ச்சியைத் தூண்ட சீனா விரும்புகிறது என்றார்.
யுனெஸ்கோவுக்கு ஆதரவளித்து வரும் சீனாவுக்கு ஆட்ரி அசோலே நன்றி தெரிவித்தார். சீனாவுடன் தொடர்ந்து ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, உலக பெண் குழந்தைகள் மற்றும் மகளிர்களின் கல்வி லட்சியத்தின் வளர்ச்சியை மேலும் முன்னேற்ற விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.