ஜூலை முதல் நாள் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அமெரிக்க இளைஞர்களின் “இளைஞர் சகாக்கள்” என்னும் பரிமாற்றக் குழுவுக்குத் தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், சீன-அமெரிக்க உறவானது மக்களின் விருப்பமாகும். அரசு சாரா பரிமாற்றம், இரு நாட்டுக்குமான அடித்தளமாகும். இளைஞர்களே இரு நாட்டுறவின் எதிர்காலமாகும் என்றார்.
அமெரிக்க இளைஞர்கள் சீனாவில் மேற்கொள்ளும் இப்பயணத்தின் மூலம், சீனாவை அறிந்து கொண்டு, சீன இளைஞர்களுடன் நட்பார்ந்த பரிமாற்றத்தை மேற்கொண்டு, நல்ல கூட்டாளியாகவும் நண்பர்களாகவும் மாற வேண்டும் என்று ஷிச்சின்பிங் விருப்பம் தெரிவித்தார்.
இரு நாட்டு மக்களுக்குமிடையில் ஒருவரை ஒருவர் அறிந்துகொள்வதற்கான பாலத்தை உருவாக்கி, இரு நாட்டு மக்களின் நட்பை அதிகரிப்பதற்குப் பங்காற்ற வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.
இப்பரிமாற்றக் குழுவில், அமெரிக்காவின் 7 மாநிலங்களில் இருந்து 14 நடுநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என சுமார் 190 பேர் உள்ளனர்.