சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மத்திய கமிட்டியின் 3ஆவது முழு அமர்வின் அறிக்கையை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஜூலை 18ஆம் நாள் வெளியிட்டு, சீர்திருத்தத்தை மேலும் பன்முகங்களிலும் ஆழமாக்கி, சீன நவீனமயமாக்கத்தை முன்னேற்றுவதற்கு ஏற்பாடு செய்தது.
இந்த அறிக்கையின்படி, உயர் நிலையுடைய சோஷலிச சந்தை பொருளாதார அமைப்பு முறையை உருவாக்கி, பொருளாதாரத்தின் உயர் தர வளர்ச்சி அமைப்பு முறையை முழுமையாக்கி, பன்முக புத்தாக்க அமைப்பு முறையை உருவாக்கி, ஒட்டுமொத்த பொருளாதார மேலாண்மை அமைப்பு முறையை முழுமையாக்கி, நகர கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி அமைப்பு முறையை மேம்படுத்தி, உயர் நிலையுடைய வெளிநாட்டுத் திறப்பு அமைப்பு முறையை மேம்படுத்த வேண்டும் என்று இம்முழு அமர்வில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
வெளிநாட்டுத் திறப்பு என்ற அடிப்படை கொள்கையிலும் திறப்பின் மூலம் சீர்திருத்தத்தை விரைவுபடுத்துவதிலும் ஊன்றி நின்று, சீனாவின் மிக பெரிய சந்தை மேம்பாட்டைச் சார்ந்து, சர்வதேச ஒத்துழைப்பை விரிவாக்குவதில் திறப்பு ஆற்றலை உயர்த்தி, மேலும் உயர் நிலையுடைய திறப்பு ரக பொருளாதாரத்தின் புதிய அமைப்பு முறையை உருவாக்க வேண்டும் என்று இந்த முழு அமர்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.