சுங்க வரி வசூலிப்பை அமெரிக்கா அதிகரித்தது குறித்து, 12ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் கோ சியா குங் கூறுகையில்,
வர்த்தக பாதுகாப்புவாதத்திற்கு எதிர்காலம் இல்லை. வர்த்தக மற்றும் சுங்க வரி போரில் யாரும் வெற்றி பெற முடியாது. சர்வதேச சமூகத்தின் பரந்த கருத்து ஒற்றுமை இவையாகும்.
அமெரிக்காவின் நடவடிக்கைகள், உலக வர்த்தக அமைப்பின் விதிகளை மீறி, விதிகளை அடிப்படையாக கொண்ட பலதரப்பு வர்த்தக அமைப்பு முறைக்கு கடுமையாக தீங்கு விளைவித்தன. இவை பிரச்சினைகளைச் தீர்க்காது என்றார்.