சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 27ம் நாள் மாலை செங்து நகரில், சீனாவில் பயணம் மேற்கொண்டுள்ள இந்தோனேசிய அரசுத் தலைவர் ஜோக்கோவைச் சந்தித்துரையாடினார்.
அப்போது ஷிச்சின்பிங் கூறுகையில், 31வது உலக பல்கலைக்கழக மாணவர்களின் கோடைக்கால விளையாட்டுப் போட்டி துவக்க விழாவில் பங்கெடுத்த நண்பர் ஜோக்கைவை வரவேற்கிறோம்.
நாட்டின் நவீனமயமாக்கம் மற்றும் தேசிய மறுமலர்ச்சியை நனவாக்கும் பாதையில், சீனாவும் இந்தோனேசியாவும் ஒன்றுக்கொன்று வாய்ப்பளித்து, சிறந்த கூட்டாளியாகத் திகழ்கின்றன. இரு நாட்டின் பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவு நிறுவப்பட்ட 10வது ஆண்டு நிறைவை வாய்ப்பாகக் கொண்டு, இந்தோனேசியாவுடன் மேலும் உயர்நிலை நெடுநோக்கு ஒத்துழைப்பை ஆழமாக்கி, பிராந்தியம் மற்றும் உலகத்துக்கு மேலதிக உறுதி மற்றும் உந்து சக்தியை ஊட்ட சீனா விரும்புகிறது என்று சுட்டிக்காட்டினார்.