சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அமைப்புத்துறை வெளியிட்ட புதிய தரவுகளின்படி, 2024ஆம் ஆண்டின் இறுதி வரை, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 2இலட்சத்து 71ஆயிரம் ஆகும். 2023ஆம் ஆண்டை விட இது 10இலட்சத்து 86ஆயிரம் அதிகரிப்பு காணப்பட்டது.
அவர்களில் கல்லூரி பட்டம் பெற்றுள்ளவர்கள், 5கோடியே 77இலட்சத்து 86ஆயிரமாக இருந்து, 57.6விழுக்காடு வகித்துள்ளது. பெண் கட்சி உறுப்பினர்கள், 3கோடியே 9இலட்சத்து 95ஆயிரமாக இருந்து, மொத்த எண்ணிக்கையில் 30.9விழுக்காடு வகித்துள்ளது. சிறுப்பான்மை இனத்தைச் சேர்ந்த கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 77இலட்சத்து 34ஆயிரமாக இருந்து, 7.7விழுக்காடு வகித்துள்ளது.
தவிர, கட்சி உறுப்பினர்களுக்கான கல்வி பயிற்சி மற்றும் நிர்வாக விவகாரங்கள் மேலும் வலுவடைந்து வருகின்றது.