கிருஷ்ண ஜெயந்தி 2024-ல் எப்போது?.. வழிபாட்டு முறைகளும்.. சிறப்புகளும்.!.

Estimated read time 1 min read

சென்னை – கிருஷ்ண ஜெயந்தியின் வரலாறு மற்றும் அதன் சிறப்புகள், இந்த ஆண்டு வரும் தேதியை பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம் தெரிந்து கொள்வோம்.

சிறப்புகள்;

மும்மூர்த்திகளில் காக்கும்  கடவுளாக திகழ்பவர்   மகாவிஷ்ணு. இவர் தன் பக்தர்களை காப்பதற்காக பல அவதாரங்களை எடுத்துள்ளார் ,அப்படி மகாவிஷ்ணு எடுத்துள்ள தசாவதாரத்தின் ஒன்பதாவது அவதாரம் தான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதாரம்.துவாபர யுகத்தில் தர்மத்தை நிலை நாட்ட மகாவிஷ்ணு கிருஷ்ண பரமார்த்தாவாக அவதரித்தார் .

ஸ்ரீ கிருஷ்ணர் கோபியர்களின் கொஞ்சும் ரமணன் ஆகவும் விளங்கினார். கம்சனை கொன்று பஞ்சபாண்டவர்களை காத்து அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்டினார் .மேலும் மகாபாரத யுத்தத்தின் மூலம் நீதியை நிலைநாட்டி தர்மம் தான் வெல்லும் என விளக்கினார். இப்படி பரமார்த்தாவாக அவதரித்த தினம்தான் கிருஷ்ணா ஜெயந்தி.  கோகுலாஷ்டமி எனவும் அழைக்கப்படுகிறது.

2024- ல்  கோகுலாஷ்டமி எப்போது?

ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் தேய்பிறை எட்டாம் நாள் அஷ்டமி திதியும் ரோகினி நட்சத்திரம் சேர்ந்த நாளில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் கொண்டாடப்படும் இந்து பண்டிகளில் கிருஷ்ணனின் பிறந்த நாளும் ஒன்றாகும்.

இந்த ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் தேதி திங்கள்கிழமை கொண்டாடப்பட உள்ளது. கிருஷ்ணர் நடுநிசியில் பிறந்ததாக கருதப்படுவதால் பூஜையை மாலை நேரத்தில் செய்வது சிறப்பாகவும் கூறப்படுகிறது.

கோகுலாஷ்டமி வரலாறு;

கம்சன் எனும் அரக்கனின் மரணம் தன் தங்கை தேவகிக்கு பிறக்கும் எட்டாவது குழந்தையால் ஏற்படும் என அசரீரி ஒலித்தது. கமிசனின் தங்கையான தேவகிக்கும் வாசுதேவனுடன் திருமணம் முடிந்தது. கம்சன் தன்னை அனைவரும் கடவுளாக போற்ற வேண்டும் என எண்ணி தேவகி மற்றும்  வாசுதேவனை சிறையில் அடைத்தார்.

அவர்களுக்கு பிறந்த குழந்தைகளை கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் கொன்றுவிடுவார். அப்படி எட்டாவது ஆக பிறந்த குழந்தையை காப்பாற்ற வாசுதேவன் யமுனை நதியை கடந்து கோகுலத்தில் யாதவ குலத்தைச் சேர்ந்த நந்தகோபன் , யசோதா தம்பதியிடம் சேர்த்தார்.

கோகுலத்தில் அனைவரின் செல்லப் பிள்ளையாக வளர்ந்து பல லீலைகளையும் அற்புதங்களையும் நிகழ்த்தினார் கிருஷ்ணர். பிறகு வளர்ந்து கம்சனையும்  அழித்தார். அதன் பிறகு தான் மகாபாரத போர் நடந்தது என புராணங்கள் கூறுகிறது .

விரதம் மேற்கொள்ளும் முறை;

கிருஷ்ணரின் தீவிர பக்தர்கள் இந்த நன்னாளில் காலை முதல் இரவு வரை உணவு அருந்தாமல் விரதங்களை மேற்கொள்வார்கள். மேலும் அன்றைய தினம் விரதம் இருப்பவர்கள் சந்திர பகவானை தரிசித்து பிறகுதான் விரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் கிருஷ்ணன் பிறந்த அன்று மூன்று பேர் மட்டுமே  விழித்திருந்தனர் .அவர்களில்  வாசுதேவன், தேவகி மற்றும் சந்திர பகவான் ஆவர். எனவே அன்று சந்திர தரிசனம் செய்வது சிறப்பாகவும் கூறப்படுகிறது.

பூஜை முறை;

வீட்டை சுத்தம் செய்து மாவிலை தோரணம் கட்டி அலங்கரித்து மாக்கோலம் இட்டு வாசலில் துவங்கி பூஜை அறை வரையிலும் குழந்தையின் கால் தடங்களை வீட்டில் நுழையும் மாறு அரிசி மாவால் பதிக்க வேண்டும். இப்படி செய்தால் கிருஷ்ணரே வீட்டிற்கு வருவதாக ஐதீகம்.

பிறகு நெய்வேத்தியமாக வெண்ணெய் ,லட்டு போன்ற இனிப்பு பதார்த்தங்களை வைத்து வழிபடவும் . இப்படி எதையும் நெய்வேத்தியமாக செய்ய முடியாதவர்கள் பக்தியுடன் தண்ணீர் மட்டுமே கொடுத்தால் கிருஷ்ண பராத்மா ஏற்றுக் கொள்வார் என்று தன்னுடைய கீதையில் கூறுகிறார்.

“நீ எனக்கு ஒரு இலையை கொடு அல்லது பூவை கொடு இல்லையென்றால் ஒரு பழத்தை கொடு அதுவும் இல்லை என்றால் கொஞ்சம் தண்ணீரை கொடு ஆனால் பக்தியோடு கொடு நான் ஏற்றுக் கொள்வேன்” என கூறியுள்ளார்.

பிறகு உங்கள் பூஜைகளை தீப ஆராதனையுடன் துவங்கி கிருஷ்ணனின் மந்திரத்தை கூறி பாராயணம் செய்து ,உங்கள் கோரிக்கைகளை வைக்க வேண்டும். குறிப்பாக குழந்தை வரம் வேண்டிக் கொள்வதால்  அடுத்த கோகுலாஷ்டமிக்குள் குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. அன்றைய தினம் உங்களால் முடிந்த தான தர்மத்தை செய்வது சிறப்பாக கூறப்படுகிறது.

கிருஷ்ண பகவான் நம் வீட்டிற்கு வந்து நமக்கு அருள்பாலிப்பதே  கோகுலாஷ்டமியின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. அதனால் இந்த தினத்தன்று  ஸ்ரீ கிருஷ்ணனின் அருளைப் பெறவும் உங்கள் வீட்டிற்கு குழந்தை செல்வமாக வரவும்  உங்களது இல்லங்களிலும் கோகுலாஷ்டமி மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்.

Please follow and like us:

You May Also Like

More From Author