வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் நவம்பர் 30-ம் தேதி பிற்பகலில் மணிக்கு 70-80 கி.மீ வேகத்தில் மணிக்கு 90 கி.மீ வேகத்தில் சூறாவளி புயலாக, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையை காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் கரையை கடக்கிறது.
புயலின் காரணமாக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் நாளை ( நவம்பர் 30.11.2024) விடுமுறை என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்து இருந்தார்கள். இதனையடுத்து, தற்போது காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்கிற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர்உள்ள தனியார் பள்ளிகளில் நாளை சிறப்பு வகுப்புகள் நடத்த அனுமதி இல்லை எனவும் ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவாரூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யும் என வானிலை மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், விடுமுறை குறித்த இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.