டோக்கியோ அரசாங்கம் இளம் குடும்பங்களை ஊக்குவிப்பதற்காகவும், நாட்டின் வரலாற்று ரீதியாக குறைந்த கருவுறுதல் விகிதங்களை உயர்த்துவதற்காகவும் தனது ஊழியர்களுக்கு நான்கு நாள் வேலை வாரத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது என ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
டோக்கியோ கவர்னர் யூரிகோ கொய்கே, பெருநகர அரசாங்கத்தின் ஊழியர்கள் ஏப்ரல் மாதம் தொடங்கி ஒவ்வொரு வாரமும் மூன்று நாட்கள் விடுமுறை எடுக்க முடியும் என்று அறிவித்தார்.
“வளைந்து கொடுக்கும் தன்மையுடன், பிரசவம் அல்லது குழந்தை பராமரிப்பு போன்ற வாழ்க்கை நிகழ்வுகள் காரணமாக யாரும் தங்கள் தொழிலை விட்டுக்கொடுக்க வேண்டியதில்லை என்பதை உறுதிசெய்ய பணி முறைகளை நாங்கள் மதிப்பாய்வு செய்வோம்,” என்று அவர் டோக்கியோ பெருநகர சட்டசபையின் நான்காவது வழக்கமான அமர்வில் கொள்கை உரையில் கூறினார்.