அடுத்த வாரம் முதல் கிறிஸ்துமஸ் விடுமுறை துவங்குவதால், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வார இறுதியும் சேர்த்து தொடர் விடுமுறையை முன்னிட்டு, டிசம்பர் 20, 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் சென்னையிலிருந்து மற்றும் சொந்த ஊருக்கும், தமிழ்நாட்டின் பல இடங்களிலும் பலர் பயணிக்க விரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் அடிப்படையில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் சேர்ந்து கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு 325 பேருந்துகள் (டிசம்பர் 20), 280 பேருந்துகள் (டிசம்பர் 21) இயக்கப்பட உள்ளன.
மேலும், கோயம்பேட்டிலிருந்து ஓசூர், பெங்களூரு போன்ற இடங்களுக்கு 81 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.