ஜனவரி 26ஆம் நாள் சீன ஊடக குழுமத்தின் 2025ஆம் ஆண்டு வசந்த விழாவுக்கான கலை நிகழ்ச்சியின் ஐந்தாவது ஒத்திகை வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதுவரை சீன பாரம்பரிய பாம்பு ஆண்டின் வசந்த விழாவுக்கான கலை நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளும் தயராகியுள்ளன.
நிகழ்ச்சியில், குவாங்டோங்-ஹாங்காங்-மக்காவ் பெரிய விரிகுடா பகுதியைச் சேர்ந்த பாடகர்கள் தங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அமெரிக்க பாப் ராக் இசைக்குழு ஒன்ரிபப்ளிக், ராக் பாடலை பாடினர்.
உலகளாவிய இணைய பயனர்கள் பங்களிக்கும் ஊடாடும் காணொளிகளுடன், கூட்டாக சீனாவில் மகிழ்ச்சியை ரசிப்பது என்ற பாடல், உலகில் நண்பர்களுக்கு சீனப் புத்தாண்டைக் கொண்டாட அன்புடன் அழைப்பு விடுத்துள்ளது. பாரம்பரிய கலாச்சாரம் மற்றும் நவீன தனிச்சிறப்புகள் ஒருங்கிணைந்த இந்த நிகழ்ச்சி, கலை மற்றும் தொழில்நுட்ப உணர்வை இணைத்து, வளமான சீனப் புத்தாண்டு சூழலைக் கொண்டுள்ளது.