கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே, இரு யானைகள் மதம் கொண்டு தாக்கியதில் பக்தர்கள் மூன்று பேர் உயிரிழந்தனர். 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
குருவங்காட்டில் அமைந்துள்ள மனக்குளங்கரா கோயிலில் நடைபெற்ற திருவிழாவின்போது வாணவேடிக்கை நிகழ்த்தப்பட்டது. அப்போது, பீதாம்பரன் மற்றும் கோகுல் ஆகிய இரண்டு யானைகள் மிரண்டு ஒன்றை ஒன்று தாக்கிக்கொண்டன. இதனால் பக்தர்கள் அலறியடித்து ஓடினர்.
அப்போது யானைகள் துரத்தி தாக்கியதில், லீலா, அம்முகுட்டி அம்மா, ராஜன் ஆகிய மூவர் உயிரிந்தனர். 25 பேர் படுகாயமடைந்த நிலையில், எட்டு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. காயமடைந்தவர்கள் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மற்றும் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைலராகி வருகிறது.