சீன தேசிய பாதுகாப்பு அமைச்சர் துங் ஜுன், 9ஆம் நாள் இரவு, அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைச்சருடன் காணொளி வழியாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது அவர் கூறுகையில்,
வெளிப்படையான கருத்தின் அடிப்படையில், தொடர்பையும் பரிமாற்றத்தையும் தொடர்ந்து, இரு நாடுகளின் சம நிலையான, அமைதியாக கூட்டு வளர்ச்சி கொண்ட, நிதானமான ராணுவப் படைகளின் உறவை வளர்க்க வேண்டும். ஆயுதங்களின் மூலம், தைவான் பிரிவினைவாதத்திற்கு ஆதரவு அளிப்பதும், தைவானைப் பயன்படுத்தி சீனா மீது தடை மேற்கொள்வதும் தோல்வியடையும்.
தொடர்புடைய நாடுகளுடன் இணைந்து, தென் சீன கடலின் அமைதியையும் நிதானத்தையும் பேணிக்காக்க சீனா பாடுபட்டு வருகின்றது. குறிப்பிட நாடு, சீனாவின் இறையான்மையை மீறுவதையும், தொடர்பு இல்லாத நாடு தலையீடு செய்வதையும் சீனா உறுதியாக எதிர்த்து வருகின்றது என்றார்.