டிட்வா புயல் வலுவிழந்த பின்னரும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட வடதமிழக மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. பல பகுதிகளில் மழை தீவிரம் குறையாமல் இருப்பதால், பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாளை 2 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
மாவட்ட ஆட்சியர் பிரதாப் வெளியிட்ட அறிவிப்பில், திருவள்ளூர்மாவட்டத்தில் தொடர்ச்சியான கனமழையை முன்னிட்டு, பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாதுகாப்பு கருதி நாளை (டிசம்பர் 4) அனைத்து அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை (0412/2025) விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது
