விமானத் தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ் 20ஆம் நாள் வெளியிட்ட நிதி அறிக்கையில், 2024ஆம் ஆண்டு, உலகளவில் 766 பயணியர் விமானங்கள் மற்றும் 361 ஹெலிகாப்டர்களை இந்நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது.
இதனால், இந்நிறுவனமானது 2024ஆம் ஆண்டில் 6 ஆயிரத்து 923 கோடி யூரோ மதிப்புள்ள வருமானத்தைப் பெற்றுள்ளது. இது, 2023ஆம் ஆண்டில் இருந்ததை விட 6 விழுக்காடு அதிகமாகும்.
மாறாக, விண்வெளி திட்டப்பணிகளின் செலவுக்காக 130 கோடி யூரோவை செலவிட்டதால், வரி விலக்கு அற்ற லாபம் நசிந்த நிலையில் உள்ளது.
இந்த இழப்பு தொகை 56 கோடியே 60 இலட்சம் யூரோ மட்டுமே ஆகும்.
இந்நிறுவனம் 2025ஆம் ஆண்டுக்குள், சீனாவின் தியன் ஜின் மாநகரில் 2ஆவது சாதனப் பொருத்தல் உற்பத்தி வழித்தடத்தைக் கட்டியமைக்கத் திட்டமிட்டுள்ளது.
இதன் விளைவாக, இந்நிறுவனத்தின் 20 விழுக்காட்டு உற்பத்தி பங்கு சீனாவில் உள்ளதாக இந்நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் குய்ல்லாமே ஃபூரி தெரிவித்துள்ளார்.