அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் திறமை ளர்ச்சியை ஆதரிப்பதில் கல்வியின் பங்களிப்பை வலுப்படுத்த வேண்டும் என்று சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் வலியுறுத்தினார். சீன நவீனமயமாக்கலில் கல்வி, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் திறமை ஆகியவற்றுக்கான தேவையை ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டியின் ஆண்டுக் கூட்டத்தொடரின் போது 6ஆம் நாள் ஒரு கூட்டுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற ஷிச்சின்பிங் கூறுகையில், உயர் தரமான கல்வி அமைப்புமுறையை கட்டியெழுப்புவதற்கு கல்வி துறையில் விரிவான சீர்திருத்தம் மேற்கொள்வது அவசியமானது என்றும், தேசிய கல்வி டிஜிட்டல்மயமாக்கல் திட்டத்தை செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
அறிவியல் தொழில்நுட்பத்தின் சுயசார்பு புத்தாக்கத்திற்கும் திறமை வளர்ச்சிக்கும் இடையே பரஸ்பர நன்மை தரும் விதமாக, கல்வியானது, தலைமை மற்றும் அடிப்படை ஆதரவு பங்களிப்புகளைத் தொடர்ந்து ஆற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.