ஆப்பிளின் தலைமை இயக்க அதிகாரி(COO) ஜெஃப் வில்லியம்ஸ் தனது ஓய்வை அறிவித்துள்ளார், இது தொழில்நுட்ப நிறுவனத்தில் ஒரு பெரிய தலைமை மாற்றத்தைக் குறிக்கிறது.
வில்லியம்ஸ் இந்த மாதம் தனது COO பதவியில் இருந்து விலகுவார் என்று ஆப்பிள் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அவர் வெளியேறும் வரை வடிவமைப்பு குழு மற்றும் சுகாதார முயற்சிகளை தொடர்ந்து வழிநடத்துவார்.
அவருக்குப் பிறகு, 2019ஆம் ஆண்டில், அதன் நிர்வாகக் குழுவில் செயல்பாடுகளின் மூத்த துணைத் தலைவராக இணைந்த 30 ஆண்டுகால ஆப்பிள் அனுபவமுள்ள சபிஹ் கான் பதவியேற்பார்.
உலகத் தொழில்நுட்ப துறையின் முன்னணி நிறுவனமான ஆப்பிளில், ஒரு இந்தியர் புதிய முக்கிய பொறுப்பை ஏற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் இந்த மாத இறுதியில் அதிகாரபூர்வமாக புதிய பொறுப்பை ஏற்கவுள்ளார்.
ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்தியரான சபீஹ் கான் தேர்வு
