தென் சீனக் கடலின் வரலாறு மற்றும் நடப்பு நிலைமை பற்றிய சர்வதேசக் கூட்டம் 10ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. சீனா, இந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியா, ஃபிலிப்பைன்ஸ், தென் கொரியா, பிரிட்டன் முதலிய 10க்கும் மேலான நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 150க்கும் மேலான நிபுணர்கள், அறிஞர்கள் மற்றும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் கலந்துகொண்டோர் 2ஆவது உலகப் போருக்குப் பிந்தைய சர்வதேச ஒழுங்கு, தென் சீனக் கடல் தீவுகளின் இறையாண்மை, அரசியல் மற்றும் சட்டம் எனும் பார்வையில் தென் சீனக் கடலின் வரலாறு, தென் சீனக் கடல் நடுவர் தீர்ப்பு உள்ளிட்டவை குறித்து ஆழமாக விவாதித்தனர்.
ஜப்பான் தென் சீனக் கடலைச் சட்டப்பூர்வமற்ற முறையில் கைப்பற்றுவதற்கு 2ஆவது உலகப் போரின் வெற்றி முற்றுப்புள்ளி வைத்துள்ளது. தென் சீனக் கடல் தீவுகள் மற்றும் பக்கத்தில் உள்ள கடற்பரப்பு இறையாண்மை தகுநிலையை சீனா பெறுவதை பல சர்வதேச உடன்படிக்கைகள் உறுதிபடுத்தியுள்ளது. இது சர்வதேச சமூகத்தின் ஆதரவைப் பெற்றுள்ளதாக இதில் கலந்து கொண்ட விருந்தினர்கள் தெரிவித்தனர்.
தென் சீனக் கடல் பற்றிய நடுவர் தீர்ப்பு, கடல் சட்டம் பற்றிய ஐ.நாவின் பொது உடன்படிக்கை உள்ளிட்ட சர்வதேச சட்டத்திற்குப் புறம்பானது என்பதோடு சட்டப்பூர்வமற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.